தமிழகம்

கட்சி நலனை மையப்படுத்தியே வேட்பாளர்கள் தேர்வு: முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உறுதி

செய்திப்பிரிவு

மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பில் திமுக வெற்றியை குறிக் கோளாகக் கொண்டே வேட் பாளர்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் தெரி வித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் தேர்வு குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்.முத்து ராமலிங்கம் கூறியதாவது:

மதுரை வடக்கு, தெற்கு சட்டப் பேரவை தொகுதிகளுக்குட்பட்ட வடக்கு மாவட்டத்தில் 33 வார் டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகள் திமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. 23 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கட்சியின் வெற்றியே முக்கியம் என்ற அடிப்படையில்தான் வேட்பாளர்கள் தேர்வு செய் யப்பட்டுள்ளனர். எந்த குற்றச் சாட்டையும் அடிப்படையாகக் கொண்டு தேர்வு நடத்தப்பட வில்லை.

அனைத்து சமுதாயத்தினர், சிறுபான்மையினருக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு, கள நிலவரத்தை அறிந்தே வேட் பாளர்கள் தேர்வு நடந்தது. வாய்ப்பு கிடைக்காத சிலர் திட்டமிட்டு தவறான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர். தேர்தல் நெருங்கும் தருணத்தில் ஆதாரமற்ற இத்தகைய தகவல்களை பரப்பி கட்சியின் வெற்றியை பாதிக்கச் செய்யும் வகையில் சிலரது அணுகுமுறை தவறாக உள்ளது.

எனது 60 ஆண்டுகால பொது வாழ்வில் எந்தச் சூழலிலும் யாருக்கும் பாரபட்சமின்றியே செயல்பட்டுள்ளேன். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வடக்கு மாவட்டத்தில் உள்ள வடக்கு, தெற்கு என 2 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறச்செய்தோம். யாருக்கு சீட் வழங்கப்பட்டது என்பதை கருதாமல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேர்தல் பணியாற்றினோம்.

இதே பாணியில்தான் தற் போதும் வேட்பாளர்கள் தேர்வு நடந்தது. அவர்களின் வெற்றியும் சிறப்பாக அமையும் என்பதை தேர்தல் முடிவுக்கு பின்னர் அனை வரும் அறிவர் என்றார்.

SCROLL FOR NEXT