தமிழகம்

அணுசக்தி துறையில் பணிபுரிய இளைஞர்கள் முன்வர வேண்டும்: அணுமின் நிலைய இயக்குநர் பேச்சு

செய்திப்பிரிவு

மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நிறுவன தலைவர் ஏ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை செயல் இயக்குநர் ஆர்.விஜயராஜ், கல்லூரி இயக்குநர் டி.சீனிவாசன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஆர்.செந்தில் குமார் வரவேற்றார்.

கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குநர் சத்தியநாராயணா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விழா மலரை வெளியிட்டார். அதிக மதிப்பெண் பெற்ற, விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகள், சிறந்த பேராசிரியர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகையை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, “இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் அணுசக்தி துறையில் இந்தியா தனியாக நின்று சாதனை படைக்கும். அணுசக்தி துறையில் பணியாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும். இத்துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன” என்றார்.

கல்லூரி செயலாளர் பி.நீல்ராஜ், துணை முதல்வர் பொன்.அறிவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT