தேர்தலில் போட்டியிடப் போவ தில்லை என்ற முடிவில் மாற்றம் இல்லை என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரி வித்தார்.
தேர்தல் பிரச்சாரத்துக்காக நேற்று கோவை வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
கட்சி சார்பற்ற விவசாயக் கூட்டு இயக்கங்கள் சார்பில், பல்லடத்தில் மே 2-ம் தேதி ‘விடியல் அறிவிப்பு மாநாடு’ நடத்தப்படுகிறது. கட்சி சார்பற்ற விவசாய சங்கத் தலைவர் எம்.எஸ்.பழனிசாமி தலைமை வகிக்கிறார். இதில், நானும், கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்துகொள்கிறோம். மாநாடு மூலமாக, விவசாயிகளின் பிரச் சினைகள் குறித்து முடிவுக்கு வருவோம். ஏற்கெனவே, விவ சாயக் கடன் தள்ளுபடி என்பதை அறிவித்துவிட்டோம். விவசாயத் தொழிலை எப்படி 3 மடங்கு லாப கரமாக்குவது என்பது குறித்த திட்டத்தையும் அறிவிப்போம்.
நான் தேர்தலில் போட்டி யிடாதது தவறு என, முகநூலில் இளைஞர்கள் வருத்தப்பட்டு எழுதியுள்ளனர். நான் போட்டி யிடும் தொகுதியில், சாதிக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டு மென்ற திமுகவின்t திட்டத் துக்கு, அப்பாவி மக்கள் பலி யாகிவிடக்கூடாது என்பதற் காகத்தான், தேர்தலில் போட்டி யிடுவது இல்லை என்ற முடிவை நீண்ட யோசனைக்குப் பின்னர் எடுத்தேன்.
எனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கூட் டணி கட்சித் தலைவர்கள் கேட்ட னர். எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளமாட்டேன் என உறுதி யாக அவர்களிடம் தெரிவித்து விட்டேன். அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
சிறுதாவூர் பங்களாவில் கன் டெயினர் லாரியில் பணம் கொண்டு செல்லப்படுவது குறித்து, தேர்தல் ஆணையத் துக்கு தெரிவித்தும் உடன டியாக நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இரண்டு நாட்கள் கழித்து அங்கு சென்று பார்த்து விட்டு, எதுவும் இல்லை எனக் கூறுகிறார்கள். தற்போது, ஜெய லலிதா கான்வாய் மூலமாகவும், போலியான 108 ஆம்புலன்ஸ் மூலமாகவும், எஸ்.பி. வாகனங் களிலும் பணம் கொண்டு செல்லப் படுகிறது. இதனை, தேர்தல் ஆணையம் தடுப்பதாகத் தெரிய வில்லை. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, திமுகவும் கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு காத்திருக் கிறது.
இதையெல்லாம் விடுத்து, மனுத்தாக்கல் செய்யும் இடத்தி லிருந்து 200 மீட்டருக்கு அப்பால் சென்று அறிக்கையை வாசித்த என் மீது வழக்குப்பதிவு செய் துள்ளனர். நான் கேட்கிறேன், தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு மனசாட்சி இருக்கி றதா? இதுபோன்ற விஷயங் களை அலைபேசி மூலமாக, இளைஞர்கள் அம்பலப்படுத்தி வருகிறார்கள். இது அலைபேசி புரட்சியாக உருவாகும் என்றார் வைகோ.
வைகோ மீது வழக்கு
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக நேற்று முன்தினம், கோட்டாட்சியர் அலு வலகம் வந்தார். அவருடன் மேலும் 4 பேர் மட்டுமே அலு வலகத்துக்குள் வந்தனர். பின்னர் வெளியே வந்த வைகோ திறந்த வேனில் நின்ற படி செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது, தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டி யிடவில்லை என்று அறிவித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் தேர்தல் விதிமுறைகளை மீறி வைகோ திறந்த வேனில் நின்றபடி பேசியதாக, தேர்தல் பறக்கும் படை அலுவலர் வேலுமயில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வைகோ மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.