கடந்த 19-ம் தேதி 33 தொகுதிகளுக்கான காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. அதில் உதகமண்டலம் தொகுதி வேட்பாள ராக ஆர்.கணேஷ் அறிவிக்கப்பட்டார். இந்நிலை யில், கடந்த 22-ம் தேதி 8 தொகுதிகளுக்கான 2-வது பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் உதகமண்டலம் தொகுதியில் ஆர்.கணேஷுக்குப் பதிலாக பி.ராமச்சந்திரன் போட்டியிடுவார் என அறிவிக்கப் பட்டது. அவருக்கு எதிராக காங்கிரஸார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து உதகமண்டலம் தொகுதியில் மீண்டும் வேட்பாளர் மாற்றப்பட்டு ஆர்.கணேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.