தமிழகம்

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் பால் முகவர்கள் சங்கம் மனு

செய்திப்பிரிவு

நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் நேற்று காலையில் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக் குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக் கப்பட்டன. லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களின் வீடுகள், உடைமைகளை இழந்து தவித்த போது நடிகர் சங்கம் அவர்களுக்கு உதவாமல் புறம் தள்ளியது.

தற்போது தங்களின் சுயலாபத்துக்காக, நடிகர் சங்க கட்டிடம் கட்ட பொதுமக்களிடம் நிதி திரட்ட அவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக பிரச்சாரம் செய்கின்ற வகையிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுகின்ற வகையிலும் வருகின்ற 17-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியு றுத்தி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி புகார் மனு கொடுத்தார்.

SCROLL FOR NEXT