தமிழகம்

ஆண்டிபட்டி பேரூராட்சியில் அண்ணன் - தம்பி அணிகளால் சூடு பறக்கும் தேர்தல் களம்

என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி பேரூராட்சியை கைப்பற்ற அண்ணன் தம்பிகளான மகாராஜன் (திமுக), லோகிராஜன் (அதிமுக) தீவிரப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டி பட்டியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் மகாராஜனும், அதிமுக சார்பில் லோகிராஜனும் போட்டியிட்டனர். இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள். இதில் மகாராஜன் வெற்றிபெற்றார். அதன்பின் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக லோகிராஜன் வெற்றி பெற்றார். இந்நிலையில், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் மகாராஜனும், லோகிராஜனும் களமிறங்கினர். இந்த தேர்தலிலும் மகாராஜனே வெற்றிபெற்றார்.

கட்சிப் பொறுப்புகளைப் பொறுத்த அளவில் மகாராஜன் ஆண்டிபட்டி ஒன்றிய திமுக செயலா ளராகவும், லோகிராஜன் அதிமுக ஒன்றியச் செயலாளராகவும் உள்ளனர்.

தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆண்டிபட்டி பேரூராட்சியில் அதிமுக 18 வார்டுகளிலும், திமுக 16 வார்டுகளிலும் போட்டியிடுகிறது. பேரூராட்சியைக் கைப்பற்ற மகாராஜனும், லோகிராஜனும் மீண்டும் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். நேற்று முன்தினம் மேளதாளத்துடன் தனித்தனியே ஊர்வலமாக வந்த அண்ணன், தம்பி அணிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

SCROLL FOR NEXT