தமிழகம்

திமுகவினர் கூட்டமாக சென்று மனுத்தாக்கல் செய்ததை தட்டிக்கேட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்

செய்திப்பிரிவு

வேலூர் மாநகராட்சி அலுவல கத்தில் திமுகவினர் கூட்டமாக சென்று மனுத்தாக்கல் செய்ததை தட்டிக்கேட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியை திமுகவினர் தாக்கிய சம்பவம் சலசலப்பை ஏற் படுத்தியது.

வேலூர் மாநகராட்சி தேர்தலில் மனுத்தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அமைக் கப்பட்ட 6 மையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தன. வேலூர் மாநகராட்சியின் 56-வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக துளசி என்பவர் போட்டியிட உள்ளார். அவர் நேற்று மனுத்தாக்கல் செய்வதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு வந்தபோது 2 பேர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி, வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு மேலும் சில வேட்பாளர் களும் மனுத்தாக்கல் செய்வதற் காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.

அந்த நேரத்தில், வேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப் பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கூட்டமாக சென்று மனுத்தாக்கல் செய்தனர்.

நாம் தமிழர் கட்சியின் வேலூர் தொகுதி துணைத் தலைவர் சங்கரன் என்பவர் காவல் துறை யினரிடம் சென்று எங்களை மட்டும் 2 பேருடன் செல்ல வேண்டும் என கூறிவிட்டு, திமுகவினரை மட்டும் கூட்டமாக செல்ல எப்படி அனு மதிக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அந்த நேரத்தில் மனுத்தாக்கல் முடித்துவிட்டு வெளியே வந்த திமுக நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பிய சங்கரை சரமாரியாக தாக்கினர். அங்கிருந்த காவலர்கள் சங்கரை மீட்டு பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்கு தல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் சங்கர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், புகார் மீது வழக்குப்பதிவு செய்து விரைவாக நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் எதிரே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை, காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் சங்கர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. புகார் மீது வழக்குப்பதிவு செய்து விரைவாக நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் எதிரே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

SCROLL FOR NEXT