கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுகவில் கணவன்- மனைவிக்கு சீட் வழங்கியிருப்பதால் கூட்டணிக் கட்சியினர் மட்டுமின்றி சொந்தக் கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தி நிலவுகிறது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலை யொட்டி பிரதான கட்சிகளான திமுக,அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிக ளுக்கு சொற்ப எண்ணிக்கையிலான சீட்டுக்களே ஒதுக்கப்பட்டதால், அக்கட்சியினர் அதிருப்தியில் உள் ளனர். அதேநேரத்தில் அதிமுகவில் தமாகாவுக்கு மட்டுமே ஒருசில இடங்கள் ஒதுக்கப்பட்டதால் அக்கட்சியில் பெரிய சலசலப்பு ஏதுமில்லை.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நகராட்சித் தேர்தலில் திமுக நகரச் செயலாளர் தண்டபாணிக்கு 21-வது வார்டும், அவரது மனைவிராணிக்கு 28-வது வார்டும் ஒதுக்கப் பட்டு பட்டியல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாநகராட்சியில் திமுக நகரச் செயலாளர் ராஜாவுக்கு 20-வது வார்டும், அவரது மனைவி சுந்தரிக்கு 27-வது வார்டும் ஒதுக்கப்பட்டதாக திமுக சார்பில் ஒரு பட்டியல் வெளியானது. இதனிடையே சுந்தரி வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னரே கடந்த 1-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இரண்டாவதாக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டி யலில் அவர்களது பெயர்கள் தவிர்க்கப்பட்டதோடு, அந்த வார்டுகள் குறித்த வேறு எந்த அறிவிப்பும் வெளியாகாததால் திமுக தொண் டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதேபோன்று 18 வார்டுகள் கொண்ட பரங்கிப்பேட்டை பேரூ ராட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்தின் மகன் சந்தர் மற்றும் அவரது மனைவிஇந்துமதி ஆகிய இருவரும் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள் ளனர்.
பெண்ணாடம் பேரூராட்சியில் திமுக வேட்பாளர் பட்டியலில் 11-வது வார்டு குமரவேலுக்கும், 5-வது வார்டு அவரது மனைவி வசந்திக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கணவன்- மனைவி இருவருக் கும் சீட் வழங்கும் திமுக, நாங்கள் கேட்டால் கிள்ளிக்கொடுக்கிறது என கூட்டணிக் கட்சியினர் ஆதங் கப்படுகின்றனர்.
எந்தெந்த நகராட்சி மற்றும்பேரூராட்சிகளில் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள் ளதோ, அந்தந்த பகுதிகளில் தங்களது மனைவிக்கு சீட் பெறும் கட்சி பிரமுகர்கள் தங்களுக்கும் சீட் பெற்றுள்ளனர். இந்நிலையில் விருத்தாசலம் நகராட்சியைப் பொறுத்தவரை முன்னாள் எம்எல்ஏகுழந்தை தமிழரசனின் மகள் மருத்துவர் சங்கவிக்கு கட்சியினர்மற்றும் பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. இதற்கிடையே திமுக நகர செயலா ளர் தண்டபாணி, கட்சித் தலைமையிடம் இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, தனக்கும், மனை விக்கும் சீட் பெற்றுள்ளார்.
மனைவி தலைவரானால் அவரது இடத்தில் இவரே செயல்பட வசதியாக இருக்கும் என்பதால் தண்டபாணியும் சீட் பெற்றுள்ளாராம். இவர் மட்டுமல்ல மனைவிக்கும் சீட் பெற்றுள்ள அனைவரின் எண்ணமும் இது தானாம். எது எப்படியோ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அந்தந்த கட்சிக்குள் உள்குத்துக்கு இப் போதே தயாராகிவிட்டது என்பது நிதர்சனம்.