தமிழகம்

திருவள்ளூர் அருகே பரிதாபம்: வீடுகளுக்குள் புகுந்த கன்டெய்னர் லாரி 2 வயது குழந்தை உட்பட 5 பேர் பலி; 4 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் அருகே புதுச்சத்திரம் பகுதியில் சாலையோர வீடுகளுக்குள் கன்டெய்னர் லாரி புகுந்த விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

மேற்குவங்க மாநிலத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சுமார் 24 டன் இரும்பு தகடுகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு வந்து கொண்டிருந்தது. திருவள்ளூர் - திருமழிசை நெடுஞ் சாலையில் திருவள்ளூர் அருகே புதுச்சத்திரம் பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வந்தபோது லாரி ஓட்டுநர் கண் அயர்ந்ததாக தெரிகிறது.

இதனால், ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த லாரி, சாலை யோரத்தில் அடுத்தடுத்து இருந்த 4 வீடுகளுக்குள் புகுந்தது. இந்த விபத்தில், ராமகிருஷ்ணன், தசரதன், விமலக் கண்ணன், நாகலிங்கம் ஆகிய 4 சகோதரர்களின் வீடுகளின் முன்புற பகுதியில் உறங்கிக் கொண் டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கதறினர்.

தகவலறிந்த திருவள்ளூர் எஸ்பி சாம்சன் தலைமையிலான போலீ ஸார், திருவள்ளூர், திருவூர், பூந்த மல்லி, ஆவடி ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவம் இடத் துக்கு விரைந்தனர். 4 கிரேன்கள், ஒரு ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். லாரி யில் இருந்த இரும்பு தகடுகளை வெளியே எடுத்து, பிறகு சம்பவ இடத்தில் இருந்து லாரியை அப்புறப் படுத்தினர். சுமார் 3 மணி நேர அப்புறப்படுத்தல் பணிக்கு பிறகே இடிபாடுகளில் சிக்கியவர்களை வெளியே எடுக்க முடிந்தது.

அதற்குள், ராமகிருஷ்ணனின் மகன் தியாகு(28), அவரது 2 வயது குழந்தை மந்தீஷ், தசரதன்(52), அவரது மகன் ஜீவா(18) ஆகிய 4 பேர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர். தசரதனின் மனைவி அங்கம்மாள்(45) சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயங்களுடன் மீட்கப்பட்ட விமலக் கண்ணன்(48), அவரது மனைவி அமராவதி(40), மகன் பிரவீன்(23) மற்றும் உறவினர் யசோதம்மாள்(60) ஆகிய 4 பேர், திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச் சைப் பெற்று வருகின்றனர். விபத் தில் மாடு ஒன்றும் உயிரிழந்தது.

சம்பவம் நடந்த பகுதியில் 6 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்று ஒரு விபத்து நிகழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி அப்பகுதி மக்கள் திருவள்ளூர்- திருமழிசை சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீ ஸார் சமாதானப்படுத்தினர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வெள்ளவேடு போலீஸார் தலை மறைவான கன்டெய்னர் லாரி யின் ஓட்டுநரை தேடி வரு கின்றனர்.

SCROLL FOR NEXT