தமிழகம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூக்குக் கயிறு மாட்டிக்கொண்டு பிச்சை எடுக்கும் போராட்டம்: 40 விவசாயிகள் கைது

செய்திப்பிரிவு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக்கொண்டு திடீரென பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய விவசாயிகள் 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 100 பேர் கடந்த வாரம் டெல்லி சென்றனர். விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரை சந்திக்க முயற்சி செய்தனர். அதற்கு அனுமதி கிடைக்காததால் அவரது வீடு செல்லும் வழியில் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், 6 நாட்களாக டெல்லியில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து ரயில் மூலம் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். ரயில் நிலைய பிளாட்பாரத்தில் விவசாயிகள் திடீரென கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக்கொண்டு கைகளில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி பிச்சை யெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் ரயில் நிலையத் தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீ ஸார் விரைந்து வந்து அனைவரை யும் கைது செய்து அழைத்துச் சென்று திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, நிதி யமைச்சர் அருண் ஜேட்லி விவசாயக் கடனை தள்ளுபடி செய்வேன் என தெரிவித் திருந்தார். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. விவசாயிகள் வாங்கிய கடனுக்காக அவர்களது டிராக்டர், வாகனங்கள், நிலங்கள் ஏலம் விடப்படுகின்றன. இதைக் கண்டித்து டெல்லியில் போராட் டம் நடத்தினோம். பாரத பிரதமர் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள், உதவிகள் வழங்கு வதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு உரிய லாபம் கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையெனில் எங்கள் சங்கம் அடுத்த கட்டமாக தீவிர போராட்டத்தில் ஈடுபடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளும் மாலை யில், எழும்பூர் ரயில் நிலையத் துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்லவன் எக்ஸ்பிரஸில் தனி பெட்டியை ஏற்பாடு செய்து அதில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர்.

          
SCROLL FOR NEXT