தமிழகம்

கந்தசுவாமி கோயில் முகப்பில் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை

செய்திப்பிரிவு

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் சுவாமிதரிசனம் செய்வதற்காக பல்வேறுமாவட்டங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோயிலுக்கு வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும்போது பல்வேறு சங்கடங்களைச் சந்தித்து வருகின்றனர். அதனால், தாய்மார்களுக்காகக் கோயில் வளாகத்தில் பாலூட்டும் அறை ஏற்படுத்த வேண்டும் எனப் பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்பேரில், கோயிலின் தெற்கு பகுதி நுழைவு வாயில் முகப்பின் இடதுபுறத்தில் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதேபோல், பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துமிடத்தில் பெண்களுக்கு உடை மாற்றுவதற்கு வசதியாக, உடை மாற்றும் அறை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும். பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கோயில் செயல் அலுவலர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT