தமிழகம்

மத்திய பட்ஜெட் 2022: காவிரி - பெண்ணாறு உட்பட பெரியநதிகள் இணைப்பு

செய்திப்பிரிவு

நாட்டில் 5 பெரிய நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியதாவது: நாட்டில் பெரிய நதிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கென்-பெட்வா நதி இணைப்புத் திட்டத்தை ரூ.46,000 கோடி மதிப்பில் நிறைவேற்ற கடந்த ஆண்டு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. நதிகள் இணைப்புத் திட்டத்துக்காக 2021-22-ம் ஆண்டு 4,300 கோடியும் 2022-23 பட்ஜெட்டில் ரூ.1,400 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோதாவரி- கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணாறு, பெண்ணாறு- காவிரி, டாமன் கங்கா-பிஞ்சார், பர் தாபி - நர்மதா ஆகிய 5 நதிகள் இணைப்புத் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. நதிகளை இணைக்கும் திட்டம் தென்மாநிலங்களுக்கு பலன் அளிக்கும். மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பின் நதிநீர் இணைப்பு திட்ட அறிக்கைகளை செயல்படுத்த நிதி உதவி அளிக்கப்படும். ரூ.4 ஆயிரம் கோடியில் நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

SCROLL FOR NEXT