திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில், தாராபுரம், பெதப்பம் பட்டி ஆகிய இடங்களில் திமுக எம்பி கனிமொழி நேற்று பேசியதாவது:
யாருக்கு என்னென்ன தேவை என்பதை உணர்ந்து திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. மனிதர்களை உண்மையாக நேசிக்கக்கூடிய, தாயுள்ளம் கொண்ட அறிக்கையை கருணா நிதி கொடுத்துள்ளார். ஸ்டாலி னின் நமக்கு நாமே பயணத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக் கள் பெற்று, அதன் மூலம் தேர்தல் அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், தேர்தல் அறிக்கையில் பருப்பு, மஞ்சள், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. மத்திய அரசு ஆணையத்தில் உள்ள தகவல்படி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான கொலைகள் நிகழ்ந்துள்ளன. தனக்கு எதிரானவர்களை அடக்க, ஒடுக்க காவல்துறையை பயன் படுத்துகிறார் ஜெயலலிதா.
முதல்வர் பிரச்சாரம் மேற் கொள்ளும் இடத்துக்கு, மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்ற னர். ஜெயலலிதா பிரச்சாரத் தின்போது மேடையில் மேல் அமர்ந்துகொண்டும், வேட் பாளர்களை கீழே தனியாக அமர வைப்பதும் என, நவீன தீண் டாமை வடிவத்தை கடைபிடிக் கிறார். இவற்றை வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ள காரணம், திராவிட இயக்க பின்புலம் மற்றும் வரலாறு அவர்களுக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத்தொடர்ந்து அருள் புரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதி களில் நேற்றிரவு பிரச்சாரம் மேற்கொண் டார். தாராபுரம் மற்றும் பெதப்பம்பட்டியில் கனிமொழி எம்பி பேசியபோது, ‘‘அதிமுக ஆட்சியில் பத்திரிகைகள் மீது 100-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன’’ என்றார்.