மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இருவருக்கு, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ஈரோடு அதிமுகவினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், 40-வது வார்டு வேட்பாளராக வைரவேல், 41-வது வார்டு வேட்பாளராக முருகநாதன், 51-வது வார்டு வேட்பாளராக காஞ்சனா அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு வீட்டுமனை வாங்கித் தருவதில் ரூ.2 கோடி மோசடி நடந்ததாக கடந்த மாதம் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அதிமுக வார்டு செயலாளர் வைரவேல் மற்றும் கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் முருகநாதனுக்கு, ஈரோடு மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பழனிசாமியின் மனைவி காஞ்சனாவுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.