தேசிய அளவிலான விண்வெளி சவால் போட்டியில் 2-ம் இடம் பெற்ற தூத்துக்குடி மாணவியர். 
தமிழகம்

தேசிய விண்வெளி சவால் போட்டி: தூத்துக்குடி மாணவியர் சாதனை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஆகியவை அடல் ஆய்வகத்துடன் இணைந்து தேசிய அளவில் நடத்திய 'விண்வெளி சவால் -2021' போட்டியில் 32 மாநிலங்களைச் சேர்ந்த 6,500 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 35 சதவீதத்துக்கும் அதிகமானோர் மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 6-ம் தேதி விண்வெளி ஆய்வு, விண்வெளியை அடைதல், விண்வெளியில் வசித்தல், அந்நிய விண்வெளி ஆகிய தலைப்புகளில் இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜெ.தாரணி, ம.நிதி, ரெ.ரியானா ஆகிய மாணவியர் 'விண்வெளி ஆய்வு' எனும் தலைப்பின் கீழ் உருவாக்கிய 'விக்ரம் லேண்டர் 2.0' தேசிய அளவில் 75 சிறந்த படைப்புகளுள் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு, இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. சாதனை மாணவியரையும், அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியைகளையும் பள்ளிச் செயலாளர் இரா.முரளி கணேசன், இயக்குநர் லெட்சுமி பிரீத்தி, தலைமையாசிரியை எம்.எஸ்.சாந்தினி கவுசல் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT