உடுமலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவின் படிப்புச் செலவுக் காக எல்.ஐ.சி. ஊழியர் சங்கம் சார் பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.
கலப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கர் மற்றும் கவுசல்யாவை, கடந்த மாதம் 13-ம் தேதி கும்பல் தாக்கியதில், சங்கர் இறந்தார். காயமடைந்த கவுசல்யா தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
நேற்று குமரலிங்கத்தில் எல்.ஐ.சி. ஊழியர் சங்க நிர்வாகிகள் கவுசல்யாவை சந்தித்து ஆறுதல் கூறினர். அவரது உயர் கல்வி செலவுக்காக முதல் கட்ட நிதியுதவியாக ரூ.25,000-க்கான காசோலையை வழங்கினர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் சாமுவேல்ராஜ், யு.கே. சிவஞானம், மாதர் சங்க நிர்வாகி ராதிகா, எல்ஐசி ஊழியர்கள் சங்க அகில இந்திய துணைச் செயலாளர் கிரிஜா, பொதுச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.