சென்னை: "மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது" என மத்திய பட்ஜெட் 2022-ஐ மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது" என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.