சென்னை: முன்னாள் தஞ்சை எம்பியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சிங்காரவடிவேல் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தத்துக்கு உள்ளானேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:
"மூத்த காங்கிரஸ் தலைவரான சிங்காரவடிவேல் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தத்துக்கு உள்ளானேன்.
சிங்காரவடிவேல் அவர்கள் நான்கு முறை தஞ்சை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் வழக்கறிஞராகவும் மக்கள் பணியாற்றியவர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.