சென்னை ஐஐடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபால் கிருஷ்ண காந்தி பேசியதாவது:
காத்மண்டு போன்ற நகரங்கள் மிக மோசமான நிலநடுக்கங்களை சந்தித்துள்ளன. நிலநடுக்கங்களை தடுக்க இயலாது. நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிய சில வழிமுறைகள் இருந்தாலும், புதிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியுள்ளது.
நிலநடுக்கத்தின் பாதிப்பு அடிப்படையில் அவற்றை 4 மண்டலங்களாக பிரித்துள்ளனர். இதில் 4-ம் நிலையில் நாம் அணு உலைகளைக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
இதற்கு ஐஐடி முன்னாள் மாணவர்கள் தங்களின் பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.
பொறியியல் கல்விக்கு பெயர் பெற்ற சென்னை நகரம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இயற்கைப் பேரிடர்கள் மூலம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வழிமுறைகளை மாணவர்கள் கண்டறிய வேண்டும்