தமிழகம்

சென்னை மாநகராட்சியில் முதல்கட்டமாக 100 வார்டுகளுக்கு தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விஜயகாந்த் வெளியிட்டார்

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான தேமுதிக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டார்.

தமிழகத்தில் நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்லில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. தேதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பட்டியலை மாவட்டசெயலாளர்கள் அனுப்ப வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தேமுதிக சார்பில் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு தேமுதிகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வேட்பாளர்களுக்கு மாநகர மாவட்டம், பகுதி, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தேமுதிக வெளியிட்ட 100 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 44 பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT