பென்னாகரம் அடுத்த நாயக்கனூர் கிராமத்தில் உயிரிழந்த ஊர் காளைக்கு இறுதிச் சடங்குகள் செய்த கிராம மக்கள். 
தமிழகம்

பென்னாகரம் அடுத்த நாயக்கனூரில் உயிரிழந்த ஊர் காளைக்கு மக்கள் அஞ்சலி

செய்திப்பிரிவு

பென்னாகரம் அடுத்த செங்கனூர், நாயக்கனூர் உள்ளிட்ட 7 கிராமங்களுக்கு தாய் கிராமமாக நாயக்கனூர் உள்ளது. இக்கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த 20 ஆண்டுகளாக ஊர் கூலிக் காளையை வளர்த்து வந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் 7 கிராமங்கள் சார்பாக நடைபெறும் எருதுவிடும் விழா மற்றும் பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் எருதாட்டங்களில் இந்தக் காளை பங்கேற்று வெற்றி பெற்று வந்துள்ளது. இதனால், ஒவ்வொரு கிராம மக்களும் காளைக்கு தேவையான புல், தவிடு உள்ளிட்டவைகளை நாள்தோறும் வழங்கி வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இக்காளை திடீரென உயிரிழந்தது. அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காளைக்கு இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்ய முடிவு செய்தனர். தொடர்ந்து காளைக்கு இறுதிச் சடங்குகளை செய்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.

SCROLL FOR NEXT