தமிழகம்

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 181 வழக்குகள் பதிவு: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 16-ம் தேதி வழங் கிய உத்தரவில், தேர்தல் நடத்தை விதிகளின்படி அனுமதியின்றி வைக் கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தொடர வேண்டும் என்றும், இந்த நீதிமன்றம் இப்பொருள் குறித்து அடுத்த முடிவு எடுக்கும் வரை ஹோர்டிங்ஸ், டிஜிட்டல் பேனர்கள், விளம்பர அட்டைகள் வைக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் அனைத்துக் கட்சி ஆலோ சனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அதில், சென்னை மாநகர முனிசிபல் சட்டம்-1919 மற்றும் விளம்பரம் தொடர்பான பல்வேறு விதிகளின்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி எந்த வொரு நபரும், எந்தவொரு இடத்திலும் விளம்பரங்களை வைக்க முடியாது. விதிகளை மீறினால் ஓராண்டு சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இந்த 2 தண்டனைகளும் விதிக்கப்படும். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை அரசியல் கட்சிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அறி வுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கு கிறது. 29-ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாள். 30-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். மே 2-ம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இறுதிநாள். வேட்பு மனு சனிக்கிழமையும் பெறப் படும். ஞாயிற்றுக்கிழமை பெறப் படாது.

சென்னையில் இதுவரை பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் 46 ஆயிரத்து 802 இடங்களில் விளம்பர பேனர் கள், சுவர் விளம்பரங்கள் அகற் றப்பட்டுள்ளன. இதுபோன்ற தேர்தல் விதிமீறல் தொடர்பாக 181 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப் பதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT