சிதம்பரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டத்தில் மாநில செயலாளர் சின்னதுரை எம்எல்ஏ பேசினார். 
தமிழகம்

100 நாள் வேலை திட்டத்தில் 3 மாதங்களாக கூலி இல்லை: விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சிதம்பரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான சின்னதுரை, மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர்செல்லையா, மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயக்குமார், ஜோதிகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட புதிய தலைவராக ரமேஷ்பாபு, பொரு ளாளராகக் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர்களாக ஜெயக் குமார். பன்னீர், வெற்றி வீரன், துணை செயலாளர்களாக நெடுஞ் சேரலாதன், ஜோதி மணி உள்ளிட்ட 27 பேர் கொண்ட மாவட்ட குழுத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாகச் செய்தியாளர்க ளிடம் பேசிய எம்எல்ஏ சின்னதுரை, “மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி, அண்மை காலமாக கட்டுமான பணிக்கு ஒதுக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இது விவசாயத்தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், ஊராட்சியில் உள்ள நீர் நிலைகள், பொதுச்சொத்துக்களை பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நிதியை மாற்று பணிக்குப் பயன்படுத்தக் கூடாது.

கடலூர் மாவட்டத்தில் 100 நாள்வேலை செய்யும் தொழிலாளர்க ளுக்குக் கடந்த 3 மாதங்களாக கூலி வழங்காமல் உள்ளனர். கூலி வழங்குவதில் சாதிவாரியாகக் கூலியை விடுவிப்பது இருக்கிறது. இதனை விவசாய தொழிலாளர் சங்க தமிழ் மாநிலக்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது.

தமிழகத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கிராமப்புறத்தில் உள்ள மக்கள் வீடு கட்ட முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள். அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய தொழிலாளர் சங்கத் தின் போராட்டத்தின் விளைவாக நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கத் தமிழக முதல்வர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நகர்புற வேலைவாய்ப்பை அறிவித்தார். அதில் முறையான கணக்கெடுப்பு நடத்தி, நகர்புற வேலைகளை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும்.மழைக்காலங்களில் விவசாயி களுக்கும் கட்டுமான தொழிலாளர்க ளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது.

விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ள விவசாயத் தொழி லாளர்க ளுக்கு எந்த நிவாரணமும் கிடைப்பதில்லை அவர்கள் பேரிடர் காலங் களிலும் மழைக் காலங்களிலும் எந்த வேலையும் இல்லாமல் வாழ்வாதரத்தை இழந்து முடங்கியுள் ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT