வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேரறிவாள னுக்கு நேற்று மருத்துவப் பரிசோதனை நடந்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் உள் ளார். இவர், சில ஆண்டுகளாக சிறுநீர்ப்பை தொற்று நோய் மற்றும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். சென்னையில் சிறுநீர்ப்பை தொற்று நோய்க்கு கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்துகொண் டார். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் தொடர் மருத் துவப் பரிசோதனையும் செய்து கொள்கிறார்.
நேற்று வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக பேரறிவாளனை போலீஸார் பாது காப்புடன் அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு மணி நேரம் பரிசோதனை முடிந்ததும், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து, சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பேரறி வாளனுக்கு சிறுநீர்ப்பை தொற்று, மூட்டு வலி மற்றும் முதுகு வலிக் காக தொடர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், கண் பார்வை தொடர்பாக பரிசோதனை செய்ய அவர் விரும்பினார். அனைத்து பரி சோதனைகளும் முடிந்த பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார்’’ என்றனர்.