மோசடியாக கூடுதல் இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காக போலி மருத்துவ பில்களை தயாரித்து வழங்கிய தனியார் மருத்துவ மனைகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீர்ப்பாயம் வழங்க உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையையும் நீதிபதிகள் பாதியாக குறைத்து உத்தரவிட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவர் கார்த்திக் (23). இவர் தன் நண்பர் சரவணனுடன் கடந்த 2012 செப்டம்பர் 16-ம் தேதி ஓட்டேரி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் கார்த்திக்கின் வலது கால் கீழ்பகுதி துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, தனக்கு ஏற்பட்ட பகுதி ஊனத்துக்கு இழப்பீடாக ரூ.6 லட்சம் கேட்டு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த கார்த் திக், திடீரென இந்த தொகையை ரூ.40 லட்சமாக உயர்த்தி இன் னொரு மனுவையும் தாக்கல் செய் தார். மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரித்து, கார்த்திக்குக்கு இழப்பீடாக ரூ.44 லட்சத்து 75 ஆயிரம் வழங்க 2013-ல் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் தமது உத்தரவில் கூறியதாவது:
மோசடியாக அதிகப்படியான இன்சூரன்ஸ் தொகை பெற வேண்டும் என்பதற்காகவே சில தனியார் மருத்துவமனைகள், இதுபோல பில்களை போலியாக தயாரித்து வழங்குவது கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வில்லிவாக்கம் மோகன் நர்சிங் ஹோம், ஹால்ஸ்டெட் சர்ஜிகல் கிளினிக்கின் மருத்துவ பில்கள், இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தயாரிக்கப்பட்டவை என்பது அப்பட்டமாக தெரிகிறது. அந்த மருத்துவ பில்கள் நம்பும்படியாக இல்லை.
பொதுமக்களின் பணத்தை யார் உறிஞ்சினாலும், அவர்களும் குற்றவாளிகளே. இதுபோன்ற மருத்துவமனைகளின் செயல்பாடு கள் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. மேலும், பாதிக்கப்பட்ட கார்த்திக்கின் மாத வருமானம், பகுதி ஊனத்தின் சதவீதமும் தவறு தலாக கணக்கீடு செய்யப்பட்டுள் ளது. இவற்றை கருத்தில் கொள்ளா மல் தீர்ப்பாயம் வழங்க உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையை ரூ.21 லட்சத்து 55 ஆயிரத்து 500 என பாதியாக குறைக்கிறோம். பாதிக்கப்பட்ட கார்த்திக்கின் வங்கிக் கணக்கில் மட்டுமே இந்த தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் 6 வாரங்களுக்குள் நேரடியாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.