எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு மாணவர்கள் இன்றுமுதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து்ள்ளார்.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்புப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
அதேபோல், கடந்த 19-ம் தேதி ஆன்லைனில் தொடங்கிய அகில ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் நேற்றுவெளியாக இருந்தது. ஆனால், திடீரென்று முதல் சுற்று கலந்தாய்வுநீட்டிக்கப்பட்டுள்ளதால் முடிவுகள்பிப்.1-ம் தேதி வெளியாகவுள்ளது. அதனால், தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் பொதுப்பிரிவுகலந்தாய்வுக்கு ஆன்லைனில் இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, ‘‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள் இன்று (நேற்று) வெளியாக இருந்தது. அதனால், தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வை ஆன்லைனில் இன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அகில இந்திய கலந்தாய்வு முடிவுகளை பிப்.1-ல் வெளியிடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அகில இந்திய கலந்தாய்வுக்கும், தமிழக கலந்தாய்வுக்கும் பலமாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அகில இந்திய கலந்தாய்வுமுடிவுகள் வெளியாகாமல் தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதனால், அகில இந்திய கலந்தாய்வு முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது. தமிழகத்தில் பொதுப் பிரிவு கலந்தாய்வுக்கு இன்று காலை 10 மணி முதல் பிப்.1-ம் தேதி நள்ளிரவு 11.59மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். பிப். 2-ம் தேதி காலை 8 மணிமுதல் 5-ம் தேதி மாலை 5 மணிவரை கல்லூரிகளில் இடங்களைதேர்வு செய்யலாம். இதுதொடர்பான விவரங்கள் https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள் ளது’’ என்றார்.