தமிழகம்

இசிஆர் சாலையில் முதல்வர் சைக்கிள் பயணம்

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, கிழக்கு கடற்கரை சாலையில் 30 முதல் 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை உத்தண்டியில் இருந்து சைக்கிள் பயிற்சியைத் தொடங்கினார்.

அங்கிருந்து, கோவளம், திருவிடந்தை, வட நெம்மேலி, நெம்மேலி, புதிய கல்பாக்கம், சூளேரிக்காடு, பட்டிப்புலம் கிழக்கு கடற்கரைசாலை வழியாக மாமல்லபுரம் அருகேயுள்ள தேவனேரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அவருடன் போலீசார் பாதுகாப்புக்காக பின் தொடர்ந்து சென்றனர். வழியில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களைப் பார்த்து ஸ்டாலின் கையசைத்தார். பொதுமக்களும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கிருந்து முதல்வர் காரில் சென்னைக்குப் புறப்பட்டார்.

SCROLL FOR NEXT