தமிழகம்

போடி மலை கிராம மக்களின் வாக்குகளை குறிவைக்கும் அதிமுக

செய்திப்பிரிவு

போடி தொகுதியில் வெற்றி பெற அதிமுகவினர் மலைக் கிராம மக்களின் வாக்குகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போடி சட்டப் பேரவை தொகுதியில் கடந்த முறை அதிமுக, திமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவியது.

இதில், அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். தற்போது அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.

இத்தொகுதியின் மலைப் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. வனத்துறையினர் கெடுபிடி காரணமாக பல மலை கிராமங்களில் போதிய சாலை வசதி செய்யப்படவில்லை. மேலும் பாம்புகள், விஷப்பூச்சிகள் நிறைந்த மலைப்பாதையில் நடந்து சென்று வாக்கு சேகரிக்க வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆர்வம் காட்டு வதில்லை.

தற்போது குறைந்த வாக்குகளே வெற்றி வாய்ப்பை தீர்மானிக்க உள்ளதால் அதிமுகவினர் மலைக் கிராம மக்களின் வாக்குகளைப் பெற மலைக் கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

இந்த தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் போடி தொகுதியில் மட்டும் ரூ.745 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன. இவற்றைக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டுள்ளோம்.

மலைக் கிராமங்களான அகமலை, குரங்கணி, கொட் டக்குடி, டாப்ஸ்டேஷன், அப்பர் ஸ்டேஷன் உட்பட 7முக்கிய மலைக் கிராமங்களில் குரங்கணி, கொட்டக்குடி ஆகிய பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து முதல் கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டோம். இரண்டாம் கட் டமாக விரைவில் மற்ற மலைக் கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT