தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை 2 நாட்களில் அனுப்ப வேண்டும்: மாவட்டச் செயலர்களுக்கு தேமுதிக உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் கொண்ட பட்டியலை 2 நாட்களில் அனுப்ப வேண்டும் என்று மாவட்டச் செயலர்களுக்கு தேமுதிக தலைமை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தேமுதிக தயாராகி வருகிறது.

இதுகுறித்து தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் விரைவில் நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் ஏற்கெனவே மனுக்களை பெற்றுள்ளோம். தற்போது,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேமுதிக சார்பில்போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலை 2 நாட்களில் அனுப்ப வேண்டும் என கட்சித்தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் பட்டியலைஅனுப்ப உள்ளோம். இத்தேர்தலில் வெற்றி பெற்று, கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்வகையில் தீவிர பணியைதொடங்கியுள்ளோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT