“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். கடலோரப் பகுதிகளில் வெப்பம் குறைவாகவும், உள்மாவட்டங்களில் வெப்பம் சற்று அதிகமாகவும் இருக்கும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து கோடை வெயில் கொளுத்துகிறது. நேற்று அதிக பட்சமாக சேலத்தில் 104.18 டிகிரி பாரன் ஹீட்டும், கரூர் பரமத்தி, தருமபுரியில் 104 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது. திருச்சியில் 103.82 டிகிரி பாரன்ஹீட்டும், திருப்பத்தூரில் 103.64, மதுரை விமான நிலையத்தில் 102.56, பாளையங்கோட்டையில் 102.2 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியி ருந்தது.
சென்னையில் நேற்று வெப்பம் சற்று குறைவாக இருந்தது. சென்னை விமான நிலையத்தில் 99.32 டிகிரி பாரன்ஹீட்டும், நுங்கம்பாக்கத்தில் 95.36 டிகிரி பாரன் ஹீட்டும் வெப்பம் பதிவாகியிருந்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி களில் அடுத்த 24 மணி நேரத்தில் (ஏப்.17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் படும். அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டும், குறைந்தபட்சம் 84.2 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் இருக்கும். கடலோரப் பகுதிகளில் வெப்பம் குறையும். வெப்ப அலை எதுவும் இல்லை. ஆனால், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மட்டும் வெப்பம் சற்று அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.