விழுப்புரம் புறவழிச்சாலையில் சுதந்திர போராட்ட வீரர்கள் ஊர்திகளுக்கு அமைச்சர் க.பொன்முடி தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்பு அளித்தனர். 
தமிழகம்

விழுப்புரம் புறவழிச் சாலையில் சுதந்திர போராட்ட வீரர்கள் ஊர்திக்கு வரவேற்பு

செய்திப்பிரிவு

விழுப்புரம் புறவழிச் சாலையில் சுதந்திர போராட்டத் தலைவர்கள் ஊர்திக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது.

டெல்லியில் நடைபெற்ற குடி யரசு தினவிழாவில் அனுமதி மறுக்கப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் ஊர்திதமிழகம் முழுவதும் பொதுமக்க ளின் பார்வைக்கு கொண்டு செல்லப் பட உள்ளது. இதற்காக சென்னையிலிருந்து மதுரை, கோவை ஆகிய ஊர்களுக்கு தனித் தனியே இரண்டு அலங்கார ஊர்திகள் நேற்று புறப்பட்டன. இந்த இரண்டு அலங்கார ஊர்திகளும் நேற்று மாலை விழுப்புரம் புறவழிச்சாலைக்கு வந்தன. இந்த அலங்கார ஊர்திகளுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்பு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, விழுப்புரம் சட்டப்பேரவை உறுப்பினர் இரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.அலங்கார ஊர்தி விழுப்புரம் வழியாக செல்வதை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து பார்வையிட்டு மகிழ்ந்தனர். சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் அந்த வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

SCROLL FOR NEXT