தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கரூர் மாவட்டம் குளித்தலையில் நேற்று முன்தினம் இரவு பேசியதாவது: இந்த தேர்தல் நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கும் நடக்கும் போர். நல்லவர்கள் நாங்கள் 6 பேர். தீயவர்கள் அவர்கள் 2 பேர்.
மாநிலம் முழுவதும் மணல் கொள்ளை நடத்தி திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கிவிட்டன. எனக்கு குடும்பம் இல்லை என கூறும் ஜெயலலிதா, ஊட்டியில் உள்ள 3,000 ஏக்கர், சிறுதாவூர், போயஸ் கார்டன் வீடுகளை மக்களுக்கு தந்துவிடவேண்டியதுதானே. திமுக தலைவர் கட்டுமரம் என்கிறார். நீங்கள் கவிழமாட்டீர்கள். ஆனால், மக்களை கவிழ்த்துவிடுவீர்கள். அதிமுக, திமுக இரண்டும் என்னை கவிழ்க்கப் பார்த்தன, முடியவில்லை. 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தேன். கொள்கைகள் பிடிக்காததால் 3 மாதங்களிலேயே விலகிவிட்டேன் என்றார்.