தமிழகம்

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளரை மாற்றக் கோரி மொட்டையடிக்கும் போராட்டம்

செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் டி.பி.எம். மைதீன்கானை மாற்றக்கோரி அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி நேற்று மொட்டையடித்துப் போராட்டம் நடத்தினார்.

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளராக டி.பி.எம். மைதீன்கானை கட்சி தலைமை அறிவித்ததைக் கண்டித்து அக்கட்சியை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் பிரதான சாலையோரம் திமுக மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சோமுராஜ் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அங்கு சோமுராஜ் திடீரென்று மொட்டை அடித்துக்கொண்டார். பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மொட்டையடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாளையங்கோட்டை போலீஸார் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். போலீஸாரை கண்டதும் திமுகவினர் அங்கிருந்து உடனடியாக கலைந்து சென்றுவிட்டனர்.

இதனிடையே திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாபிடம், பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT