அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். உடன் நிர்வாகிகள். 
தமிழகம்

நிர்வாகத்திறன் இல்லாத தமிழக அரசு: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் டி.குண்ணத் தூரில் நடந்த நிகழ்ச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அஞ்சலி செலுத்தினார்.

மாவட்ட மாணவரணிச் செயலாளர் மகேந்திர பாண்டியன் தலைமை வகித்தார். எம்எல்ஏ.க்கள் ஐயப்பன், பெரியபுள்ளான், முன்னாள் எம்எல்ஏ.க்கள் தமிழரசன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

அதிமுக ஆட்சியின்போது குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.2,500 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கி மக்களின் பாராட்டைப் பெற்றோம். திமுக அரசு பொங்கலுக்கு மண்டை வெல்லத்தைக்கூட தரமானதாக வழங்கவில்லை. தரம் மற்றும் தட்டுப்பாடு இல்லாமல் பொங்கல் பரிசை வழங்கும் அளவுக்கு தமிழக அரசிடம் நிர்வாகத்திறன் இல்லை. மழை வெள்ளமானாலும், மண்டை வெல்லமானாலும் தமிழக அரசின் செயல்பாடு மோசமாகவே உள்ளது என்றார்.

மதுரை மாநகர் அதிமுக சார்பில் தமுக்கம் தமிழ் அன்னை சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

SCROLL FOR NEXT