உடுமலைப்பேட்டை சங்கரின் கொலையைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் மற்றும்எஸ்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு மனுவில், ‘‘தமிழகத்தில் ஜாதிய கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தேசிய குற்ற ஆவண அறிக் கைப்படி ஜாதிய வன்முறையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்தவர்கள் பெரும்பாலும் பெற்றோர்கள், அவர்கள் சார்ந்த ஜாதி அமைப்புகளின் மூலம் கொலை செய்யப்படுகின்றனர். சமீபத்தில் காதலித்த பெண்ணை கலப்புத் திருமணம் செய்த உடு மலைப்பேட்டை சங்கர் கவுரவத் திற்காக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்ற வழக்கு களில் தம்பதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந் தும் காவல்துறை இயக்குநர், திருப்பூர் மாவட்ட காவல்துறை இயக்குநர் ஆகியோர் தடுக்கவில்லை. குறிப்பாக லதாசிங் என்ற வழக்கில் 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் விதித் துள்ள உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. ஜாதி மற்றும் மத மறுப்பு திருமணங்களை செய்பவர்கள் கவுரவக்கொலைக்கு ஆளா கின்றனர். கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் இக்கொலை களை ஊக்குவிக்கின்றனர்.
எனவே இதுபோன்ற கொலை களை தடுக்காத போலீஸ் கண்கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை பணியிடை நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வழி காட்டுதல்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து தமிழக தலை மைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அனைத்து மாவட்டத்திலும் சாதி மறுப்பு திருமணம் செய்தோருக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்க தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். உடுமலை சங்கரின் கொலையைத் தடுக்கத் தவறிய மாவட்ட எஸ்.பி மற்றும் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்தமனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பாக நடந்தது. அப்போது இந்த மனுவில், போதுமான விவரங்கள் இல்லை.
தேவையான ஆதாரங்களைத் திரட்டி புதிதாக மனுதாக்கல் செய்யக் கூறினர். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். அதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.