தமிழகத்துக்கான நலத் திட்டங் கள் குறித்து விவாதிக்க பலமுறை முயன்றும் முதல்வர் ஜெய லலிதாவை சந்திக்க முடியவில்லை என்று மத்திய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை, கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் பேசியதாவது:
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைந் துள்ள பாஜக அரசு விவசாயம், தொழில்துறை மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்த அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் விவ சாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க அதிக நிதி, மானியம் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. கரும்பு, மக்காச் சோளத் திலிருந்து எத்தனால் எடுப்பது, பயோ பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கான சரக்கு கட்டணம் சீனாவில் 8 சதவீதமாகவம், அமெ ரிக்க, ஐரோப்பிய நாடுகளில் 10 முதல் 12 சதவீதம் வரையும் உள் ளது. ஆனால், இந்தியாவில் 18 சதவீதமாக உள்ளது.
எனவே, சரக்கு கட்டணத்தை குறைக்க சாலை வசதி, மற்றும் நீர்வழி போக்குவரத்துக்களை அதிக அளவில் ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள பக்கிங்காம் கால்வாயை சீரமைத்து நீர்வழி போக்குவரத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு ஒத்துழைத்தபோதிலும். தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு அமைய உள்ள அரசு இந்தத் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகிறோம்.
கப்பல் துறையின் மூலம் மட்டும் தமிழகத்தில் சுமார் ரூ. 83 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்ட மிட்டுள்ளோம். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அமைய உள்ள புதிய துறைமுகத்தின் பணி கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும். இது தவிர தமிழகத் தில் மேலும் 2 துறைமுகங்கள் அமைக்கப்படும். சென்னை துறை முகத்தையும், பெங்களூரையும் இணைக்கும் விரைவுச் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தமிழகத்துக்கான நலத் திட்டங் களையும், தொலைநோக்குத் திட்டங்களையும் செயல்படுத்த மாநில அரசு ஒத்துழைப்பதில்லை. தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டால் முதல்வர் அனுமதி இன்றி எதுவும் சொல்ல முடியாது என்கிறார். தமிழகத்துக்கான திட் டங்கள் குறித்து விவாதிக்க பல முறை முயன்றும் முதல்வர் ஜெய லலிதாவை சந்திக்க முடிய வில்லை. இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.