சென்னை: குடியரசு தினத்தன்று நடைபெறும் தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: " கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுகிறது.
கரோனா பரவல் குறைந்த பின்னர் வேறொரு நாளில் தேநீர் விருந்து நடைபெறும். தமிழக மக்கள் அரசு வழிகாட்டுதலின்படி கரோனா வழிகாட்டுமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.