சாயல்குடி அருகே பிள்ளையார்குளம் கிராமத்தில் கதிர் விளையும் நேரத்தில் கருகிய நெற்பயிர்கள். 
தமிழகம்

கதிர் விளையும் நேரத்தில் சாயல்குடியில் கருகிய 2000 ஏக்கர் நெற்பயிர்

செய்திப்பிரிவு

டிசம்பரில் போதிய பருவமழை யின்றி ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை சுற்றியுள்ள 40 கிராமங்களில் கதிர் விளையும் நேரத்தில் நெற்பயிர்கள் கருகின.

கடந்த ஆண்டு பருவமழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் உரத்துக்கு தட்டுப்பாடு ஏற் பட்டதால், விவசாயிகள் கூடு தல் விலைக்கு உரம் வாங்கி பயிருக்கு இட்டனர். இதனால் கூடுதல் செலவும் ஏற்பட்டது. மாவட்டத்தில் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பினாலும் கட லாடி வட்டாரத்தில் பல கண் மாய்கள் நிரம்பவில்லை.

இப்பகுதியில் பருவ மழையும் போதிய அளவு பெய்யவில்லை. வைகை தண்ணீரும் கிடைக்க வில்லை. சாயல்குடி அருகே காணிக்கூர், வாகைக்குளம், பிள்ளையார்குளம்,மறவர் கரிசல்குளம்,கீரந்தை, அல்லிக்குளம்,வெள்ளம்பல், புதுக்குடியிருப்பு மணிவலை, வேடகரிசல்குளம்,குருவாடி உள்ளிட்ட 40 கிராமங்களில் 50 சதவீத கண்மாய்களில் கால்வாசி கூட தண்ணீர் நிரம்பவில்லை. கடந்த டிசம்பரில் மிதமான மழை கூட பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் 2000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் கருகி விட்டன.

இதுகுறித்து பிள்ளையார் குளம் விவசாயி வீ. சத்தியமூர்த்தி கூறியதாவது:

கடந்த ஆண்டு டிசம்பரில் போதிய மழை பெய்யாததால் கதிர் விளையும் நேரத்தில் நெற் பயிர்கள் கருகி விட்டன. இதனால் ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவிட்ட விவசாயிகள் கவ லையில் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT