அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநிலம் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ வி.எம்.சி.சிவக்குமார், என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கழக முன்னாள் தலைவர் வையாபுரி மணிகண்டன், நெடுங்காடு ஜி.பன்னீர் செல்வம், திமுகவைச் சேர்ந்த ஜி.சுந்தரவடிவேலு, வழக்கறிஞர் எல்.ராமலிங்கம், ஏம்பலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராஜாராமன், புதுச்சேரி மாநில தொமுச செயலாளர் பிராங்க்ளின் பிரான்சுவா ஆகியோர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து, அக்கட்சியில் இணைந்தனர். மேலும், புதுச்சேரி ஐஎன்டியுசி தொழிற்சங்கம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பி.எம்.சரவணன் உள்ளிட்டோரும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.