கொளத்தூரில் டாஸ்மாக் பணம் ரூ.40 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்ற வர்களை தடுக்க முயன்ற காவலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். தப்பிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை மொத்தமாக வசூ லித்து, டாஸ்மாக் நிறுவன வங்கிக் கணக்கில் செலுத்தும் பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது. பணம் வசூலிக்கும் பணியாளரான அனகாபுத்தூரை சேர்ந்த மோகன் (25), டாஸ்மாக் கடை களில் பணத்தை வசூலிக்க நேற்று முன்தினம் மாலை ஒரு மினி வேனில் வந்தார். பாதுகாப்புக்காக ரேடியன்ட் மேனேஜ்மென்ட் நிறுவன காவலாளி ஆவடி மிட்ன மல்லியை சேர்ந்த ராஜேந்திரன் (53) என்பவரும் உடனிருந்தார். அண்ணா நகர் நடுவாங்கரையை சேர்ந்த வினோத்குமார் (30) வேனை ஓட்டினார்.
கொளத்தூர் செந்தில் நகர் 200 அடி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் பணத்தை வசூலிக்க, வேனில் இருந்து இறங்கி மோகன் நடந்து சென்றார். அதற்கு முன்பு டாஸ் மாக் கடைகளில் வசூலித்த பணம் ரூ.40 லட்சம் வேனில் இருந்தது. அதன் பாதுகாப்புக் காக காவலாளி ராஜேந்திரன், ஓட்டுநர் வினோத்குமார் ஆகி யோர் வேனிலேயே இருந்தனர்.
அப்போது 2 பைக்குகளில் வந்த 3 பேர், வேனில் இருந்த ராஜேந்திரன், வினோத்குமார் மீது மிளகாய்ப் பொடியை தூவி, வேனில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அவர்களை ராஜேந்திரன் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், கையில் இருந்த அரிவாளால் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டினர்.
அதற்குள், வேனில் இருந்து இறங்கிய ஓட்டுநர் வினோத்குமார், பணத்தை கொள்ளையர்கள் பறித்துச் செல்ல முடியாதபடி, ரிமோட் கன்ட்ரோல் மூலம் கதவுகளை பூட்டிவிட்டு, அங்கிருந்து ஓடிச் சென்றார். வேன் கதவுகளை உடைக்க முடியாததாலும், பொதுமக்கள் கூடியதாலும், கொள்ளை முயற்சியை கைவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராஜமங்கலம் போலீஸார், ராஜேந்திரனை மீட்டு கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இறந்தார்.
3 பேர் கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. அந்த பகுதிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் அவர்களது உருவம் பதிவாகி இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.