கோப்புப் படம் 
தமிழகம்

தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பெரிதும் நேசித்த மாவீரர் நேதாஜி: டிடிவி தினகரன் புகழாரம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பெரிதும் நேசித்த மாவீரர் நேதாஜியின் பெருமைகளையும் தியாகங்களையும் எந்நாளும் போற்றி வணக்கிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயரை மிரள வைத்த மாமனிதர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 ஆவது பிறந்தநாள் இன்று.
இதனையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

டிடிவி தினகரன்

"நம் தாய்த்திரு நாட்டின் தவப்புதல்வர், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்திய
கள நாயகர், வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று!

வங்கத்தில் பிறந்து, இந்தியா முழுவதையும் வசீகரித்ததோடு, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் பெரிதும் நேசித்த மாவீரர்
நேதாஜியின் பெருமைகளையும் தியாகங்களையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்!"

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT