தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் இ-சேவை மையங்கள் தொடங்க 36 பேருக்கு ஆணைகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் இ-சேவை மையங்கள் தொடங்குவதற்கான ஆணைகளை 36 பேருக்கு தகவல்தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
சுயவேலை வாய்ப்பு
தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய இ-சேவை மையங்கள், அரசின் சேவைகளைப் பொதுமக்கள் எளிதில் பெறுவதற்கும், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் பெரிதும் பயனளிக்கும்.
இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.