தமிழகம்

`சிங்கார சென்னை' திட்டத்தின் கீழ் ரூ.18 கோடியில் 23 பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி ஆணையர்ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சியின் பூங்காத் துறை சார்பில் மாநகரில்சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மக்களின் பொழுதுபோக்குக்காகவும் 718 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, 547பூங்காக்கள் ஒப்பந்த அடிப்படையிலும், 111 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையிலும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பூங்காக்கள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சட்டப்பேரவையில் 2021-22-ம்நிதியாண்டுக்கான பட்ஜெட் விவாதத்தின்போது, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைக்கப்படும், ஏற்கெனவே உள்ள பூங்காக்கள் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறைஅமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

அதனடிப்படையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதியபூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 28 பணிகளுக்கு அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டு, ரூ. 24.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 23 பூங்காக்கள் ரூ.18 கோடியே 48 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ளன. 5 பூங்காக்கள் ரூ.5 கோடியே 95 லட்சத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, திறந்த வெளியில் உடற்பயிற்சிக் கருவிகள்அமைத்தல், சுற்றுச் சுவர்,சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைதல், புல் தரைகள், பாரம்பரிய மர வகைகள், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி, மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

SCROLL FOR NEXT