தமிழகம்

சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன்

செய்திப்பிரிவு

தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் மீது கூடுதல் நிதி சுமை ஏற்றப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ 20 ஆயிரம் கோடிக்கு மேல் சுங்கக் கட்டணம் செலுத்தி வருவோருக்கு அபராதம் விதிப்பது போல் ஆண்டுக்கு 15 சதவிதம் கட்டண உயர்வு செய்வது அநியாயமானது. பழுதடைந்த சாலைகளை சீரமைக்காமலும் வழிமாற்றி,வழிமாற்றி சிரமப்படுத்துவதே நடைமுறை ஆகியுள்ளது.

நெடுஞ்சாலைகளைத் தனியாருக்குக் கொடுத்து சுங்கக் கட்டணத்தை தவறாமல் உயர்த்தி, தனியார் நிறுவனங்கள் வழிப்பறி கொள்ளையடிக்க மத்திய அரசு வழிவகை செய்கிறது அறிவிக்கப்பட்ட சுங்கக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT