பண்ருட்டியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காட்டுப்பாளை யத்தைச் சேர்ந்த ஸ்ரீதருக்கும், ஜெயசந்தியாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில்ஜெயசந்தியா நடனமாடினார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையால் ஸ்ரீதர் வெளியேறினார்.
திருமண நிகழ்வுக்காக தனக்குரூ.7 லட்சம் வரை செலவானதா கவும், அந்த பணத்தை பெற்றுத் தரும்படி ஸ்ரீதர் நேற்று முன் தினம் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில், ஜெயசந்தியாவும் நேற்று பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியா ளர்களிடம் கூறியது:
எனக்கும், காட்டுப்பாளை யத்தைச் சேர்ந்த ஸ்ரீதருக்கும் முறைப்படி திருமண நிகழ்வு நிச் சயிக்கப்பட்ட போதிலும், அவர் கார் மற்றும் 50 பவுன் நகை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என என்னிடம் நிர்பந்தித்தார். திருமண வரவேற்பு நிகழ்வின் போதுஅவரும் தான் என்னுடன் நடனம்ஆடினார்.
ஆனால் அவர் கோபித் துக் கொண்டு சென்றதற்கான காரணம் வரதட்சணையை திருமணத்திற்கு முன்னரே கொடுக்க வில்லை என்பதால் தான். என்சொந்த விருப்பத்தின் பேரில் தான்உறவினரை திருணம் செய்து கொண்டேன். என்னிடம் வரதட் சணை கேட்டு நிர்ப்பந்தித்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.