தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ‘தி இந்து’, தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய கல்லூரி மாண வர்களுக்கான ‘வாக்காளர் வாய்ஸ்’ நிகழ்ச்சி தொகுப்பு, பொதிகை தொலைக்காட்சியில் இன்று (ஞாயிறு) மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. இதில் முதல்முறையாக வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவ, மாணவி களிடம், வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து ‘வாக்காளர் வாய்ஸ்’ என்ற மாணவர் திருவிழா நிகழ்ச்சியை நடத்திவருகிறது.
குடியாத்தம், மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை, நாகப் பட்டினம், ஈரோடு ஆகிய 7 இடங் களில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் ‘வாக்காளர் வாய்ஸ்’ நிகழ்ச்சி வரும் 26-ம் தேதி நடக்க உள்ளது.
‘தி இந்து’வின் ‘வாக்காளர் வாய்ஸ்’ நிகழ்ச்சிக்காக பாடலாசிரி யர் அண்ணாமலை எழுதி, இசை யமைப்பாளர் தாஜ்நூர் இசை யமைத்த பாடல், இந்த நிகழ்ச்சி களில் ஒலிபரப்பப்பட்டது. ஒவ் வொரு நிகழ்ச்சியிலும் அந்தந்த மாவட்ட தேர்தல் துறை உயர் அதி காரிகள் பங்கேற்று தொடங்கிவைத் தனர். ஒவ்வொரு ஊரிலும் 1,500 மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி அரங்கில் மாதிரி வாக் குச் சாவடிகளும் அமைக்கப்பட்டன. இந்திய ஜனநாயகத்தின் சிறப்புகள் குறித்து ‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ் விளக்கிப் பேசினார். அந்தந்த பகுதிகளை சேர்ந்த பேராசிரியர்கள், பிரபல எழுத் தாளர்கள் பங்கேற்று, வாக்களிப் பதன் அவசியம் குறித்து மாணவர் களிடம் விளக்கிப் பேசினர்.
இந்த நிகழ்ச்சிகளை தூர்தர்ஷ னின் பொதிகை தொலைக்காட்சி பதிவு செய்துள்ளது. பொதிகை தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சிகள் இன்று தொடங்கி ஞாயிறுதோறும் ஒளிபரப்பாக உள்ளது.
நாகப்பட்டினத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை என்.எஸ்.அருண் மொழி தயாரித்து வழங்கியுள்ளார். அது ‘வாக்காளர் வாய்ஸ்’ என்ற தலைப்பில் இன்று (ஞாயிறு) மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியை பி.சம்பத் தயாரித்துள்ளார். அந்த நிகழ்ச்சி தொகுப்பு மே 1-ம் தேதி (ஞாயிறு) மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியை என்.எஸ்.அருண்மொழி தயாரித்துள்ளார். அந்த நிகழ்ச்சி தொகுப்பு மே 8-ம் தேதி (ஞாயிறு) மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. தேர்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த பொதுநலப் பணியில் தூர்தர்ஷனும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.