தமிழகம்

தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவராக விருதுநகரைச் சேர்ந்தஎம்.சின்னத்தம்பி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே இந்த அமைப்பில் துணைத் தலைவராக இருந்தவர் ஆவார்.

தமிழ்நாடு மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்களுக்கு மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவராக எம்.சின்னத்தம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதலின் பேரில் தமிழ்நாடு மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவராக எம். சின்னத்தம்பி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் பதவிக்காலம் உடனடியாக அமலுக்கு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சின்னத்தம்பி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதுநிலைப் பட்டதாரியான இவர், 11 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்டவர். தற்போது, திருத்தங்கலில் வசித்து வருகிறார். விருதுநகர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT