‘பைன் ஃபியூச்சர்’ நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டு இதுவரை புகார் அளிக்காமல் யாரேனும் இருந்தால் தற்போது புகார் அளிக்க முன்வரலாம் என கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து கோவை பொரு ளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் நேரு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 2012-ம் ஆண்டில், கோவை சிங்காநல்லூர் என்.ஆர்.ஐ. கார்டன் பகுதியில் நடத்தி வரப்பட்ட பைன் ஃபியூச்சர் நிதி நிறுவனத்தில் பணத்தை செலுத்திய முதலீட்டாளர்கள் பலர் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த வழக்கில் பீளமேடு கிரியம் மன் கோயில் பகுதியைச் சேர்ந்த மோ.விவேக் (31), அதே பகுதியைச் சேர்ந்த சு.செந்தில்குமார்(39), சத்தியலட்சுமி(28), கோவை ஆடியபாதம் தெருவைச் சேர்ந்த ரா.நித்யானந்தம்(28) ஆகியோர் மீது முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவர்கள், சுமார் 23,887 முதலீட் டாளர்களிடம் இருந்து மல்டி லெவல் மார்க்கெட்டிங், பான்ஸி திட்டம் உட்பட பல்வேறு திட்டங் கள் மூலமாக பொய்யான ஆவணங் களைப் பயன்படுத்தி முதலீட்டாளர் களிடம் இருந்து மொத்தம் ரூ. 818 கோடி வசூலித்து ஏமாற்றி யது விசாரணையில் தெரியவந்தது.
3 குற்றப்பத்திரிகைகள்
இந்த வழக்கு கடந்த 3 ஆண்டு களாக விசாரிக்கப்பட்டு சம்பந்தப் பட்டவர்களின் சொத்துகளைக் கண்டறிந்து இதுவரை சுமார் ரூ.80 கோடி மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வழக் கில் எதிரிகள் மீது இதுவரையில் 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் இருந்து புதிய புகார்கள் வந்த தால், அதையும் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது விரை வில் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
எனவே, அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு, இதுவரை புகார் அளிக்காத யாரேனும் இருந்தால், இந்த அறிவிப்பு கிடைத்த 10 நாட்களுக்குள், கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீ ஸில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.