செங்குன்றம் கூட்டுச்சாலையில் நேற்று முகக்கவசம் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளின் வாகனங்களில் Thanks for Wearing mask என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கரை ஒட்டி, நன்றி தெரிவித்த போக்குவரத்து போலீஸார். 
தமிழகம்

ஆவடியில் முகக்கவசம் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு நன்றி தெரிவித்த போலீஸார்

செய்திப்பிரிவு

ஆவடி: ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் முகக்கவசம் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு நேற்று போக்குவரத்து போலீஸார் நன்றி தெரிவித்தனர்.

ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள ஆவடி, செங்குன்றம் மற்றும் எண்ணூர் உள்ளிட்ட 25 காவல் நிலையங்களின் எல்லை பகுதிகளில் முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடம் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் செங்குன்றம் கூட்டுச்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் முகக்கவசம் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு நேற்று போக்குவரத்து போலீஸார் நன்றி தெரிவித்தனர்.

அவர்கள் நேற்று முகக்கவசம் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளில் சுமார் 5 ஆயிரம் பேரின் வாகனங்களில் Thanks for Wearing mask என்ற வாசகம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக லோகோவுடன் கூடிய ஸ்டிக்கரை ஒட்டினர்.

கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, முகக்கவசம் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகளின் வாகனங்களில் நன்றி தெரிவிப்பு வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டப்படும் என, ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT