திருநெல்வேலி மாவட்டம், சங்க ரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளத்தில் தீப்பெட்டி ஆலையில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 3 பெண்கள் பலத்த காயமடைந்தனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளத்தில் `கெங்கா மேட்ச் ஒர்க்ஸ்’ என்ற தீப்பெட்டி ஆலை இயங்கி வருகி றது. கழுகுமலையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன் (24) என்பவர் பெயரில் ஆலைக்கு உரிமம் வாங்கப்பட்டுள்ளது. லட் சுமிபுரத்தைச் சேர்ந்த ராமசுப்பு மகன் சுப்புராஜ் என்பவர் ஆலையை நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் 2 மணியளவில் தீக்குச்சிகளை மூட்டையாக கட்டி டெம்போவில் ஆலைக்கு கொண்டு வந்தனர். ஆலை ஊழி யர் மலையாங்குளத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் செல்வம், அவரது தம்பி கந்தசாமி என்ற முத்துக்குமார் (28) ஆகியோர் மூட்டைகளை இறக்கினர்.
அவற்றில் ஒரு மூட்டையில் தீப்பிடித்தது. பதறிப்போன அவர் கள், மேலும் தீ பரவாமல் தடுக்க மற்ற மூட்டைகளை அகற்ற முயன்றனர். அப்போது கந்தசாமி மீது தீக்குச்சி மூட்டைகள் விழுந்து அமுக்கின. தீ வேக மாக பரவியதில் ஆலையில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களும் சிக்கினர். பெண் களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில் தீயணைப் புப் படையினர் தீயை அணைத் தனர். படுகாயம் அடைந்த கந்தசாமி உயிரிழந்தார். மலை யாங்குளத்தைச் சேர்ந்த அய்ய னார் மனைவி மாரியம்மாள் (63), போத்திராஜ் மனைவி ராஜாமணி (45), கணேசன் மனைவி மாரியம் மாள் (38) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து, பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
தீ விபத்தில் உயிரிழந்த கந்தசாமி என்ற முத்துக்குமார் ஐடிஐ படித்தவர். கடந்த 5 ஆண்டுகளாக மஸ்கட்டில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயமாகி, வைகாசி மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்காக 3 மாத விடுமுறையில் கடந்த 10 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.